Sunday, July 18, 2010

கவிதை

கற்பிழந்த நிலம்

எம் மண்ணின்

ஆடையைக் கழற்றி

போதை ஊசி போடுகிறது

உலகமயம்..

 

'கரு' ப்பை இழந்த நிலம்

ஒருப்பை நெல் கூட

தருவதில்லை..

அடுக்குமனைகளை

சுமப்பதால்..

 

 

உழவு மாடுகள்

கசாப்புக்கடையில்

ஏர் கலப்பைகள்

அடுப்பங்கரை விறகாய்..

 

சம்பா, குறுவை

நெல்லறுத்த உழவன்

ரேசன் கடையில்

ஒரு ரூபாய் அரிசிக்கு

முட்டி மோதி

நெருசலில்...

 

விதைகள்

மலட்டுத்தன்மையில்

ஊனமாய் முளைக்கிறது

திணித்தவன்

முதலாளியாய்

உழைத்தவன்

அடிமையாய்...

தாராளமயம்

தமிழர் பண்பாட்டை

தாழ்ப்பாள் போட்டு

கற்பழிக்கிறது...

 

1 கருத்துகள்:

அன்புடன் நான் said...

கவிதை மிக சிறப்பா இருக்குங்க ...... மனசு ரொம்ம வலிக்கிறது.... என்னச்செய்ய....
தங்களின் வலி நிரைந்த பகிர்வுக்கு.... என் வணக்கம்.