Thursday, May 19, 2011

மனித குலப்பகைவன் இராசபட்சே ஐ,நா. குழு அறிக்கை

தடை செய்யப்பட்ட கொத்துகுண்டுகள், தீக்குண்டுகள் ஆகியவற்றை இடை விடாமல் வீசி 2008-2009 ஆம் ஆண்டுகளில் சிங்கள-இந்திய ஆரியக் கூட்டணி இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த போது உலகத் தமிழினமே பொங்கி எழுந்தது. தன் முன்னே நடக்கும் இந்த மனிதப் பேரவலத்தைக் கண்டும் காணாமல் மவுனம் காத்த உலக மனிதகுலத்தின் மனக்கதவை தட்டி நின்றது. பேரழிவு நடந்து முடிந்த பிறகு இப்போதுதான் உலகம் ஓரளவு விழித்துப் பார்க்கிறது.

"சிறீலங்கா குறித்த ஐக்கிய நாடுகள் விசாணைக் குழு" தனது அறிக்கையை ஐ,நா தலைமைச் செயலாளர் பான்-கீ-மூனிடம் கடந்த ஏப்ரல் 12,2011 அன்று அளித்தது. மாருஸ்கி தாருஸ்மான் ((Maruzki Darusman-இந்தோனேசியா), யாஸ்மின் சூகா அம்மையார் (Yasmin Sooka- தென் ஆப்பிரிக்கா), ஸ்டீவன் ரத்னர் (Steven Ratner- அமெரிக்க ஐக்கிய நாடுகள்) ஆகிய மூவர் கொண்ட குழுவை இப்பணிக்காக ஐ.நா. தலைமைச் செயலாளர் அமர்த்தினார். இக்குழுவினர் ஆறு மாதங்களில் விரைவான, விரிவான விசாரணை நடத்தி அளித்த அறிக்கை ஐ.நா அவையால் 2011 ஏப்ரல் 25-அன்று வெளியிடப் பட்டது.ஆயினும் அதற்கு முன்னதாகவே அவ்வறிக்கை விவரங்கள் கசிந்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ஐ.நா குழுவின் இந்த அறிக்கையை ஏற்கவே முடியாது என்று அறிவித்த சிங்களக் குடியரசுத் தலைவர் இராசபட்சே சிங்களர்களை ஐ.நா அவமதித்து விட்டதாகக் கூக்குரல் எழுப்பினார். ஐ.நா குழு பரிந்துரைத்தது போல உலகச் சட்டங்களின் கீழ் இலங்கை அரசு குறித்த விசாரணை நடக்குமானால் அதனை எதிர்த்து சீன-, ரசிய உதவியை நாடப்போவதாக அச்சுறுத்தி னார். சிங்கள மானத்தைப் பாதுகாக்க மின்சார நாற்காலியில் அமர்ந்து உயிர்விடவும் தாம் தயார் என கொக்கரித்தார். நாஜி இட்லரைப் போலவே பன்னாட்டுத் தொழிலாளர் நாளான மே 1-ஐ சிங்கள இனவெறிப் பேரணி நடத்தும் நாளாக அறிவித்திருகிறார். மிகப்பெரும் அச்சுறுத்தலில் மீண்டும் ஈழத் தமிழர்கள் வைக்கப்பட் டுள்ளார்கள்.

போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்:
நான்காம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இன அழிவு குறித்து உலகத் தமிழர்கள் எடுத்துக் காட்டிய சில அடிப்படை உண்மைகளை ஐ.நா விசாரணைக் குழு இவ்வறிக்கையில் உறுதி செய்துள்ளது.
1). இலங்கை அரசு நடத்திய விரிந்த அளவிலான தொடர் குண்டு வீச்சுகள் மூலம் பெருந்தொகை பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
2). மருத்துவமனைகள் மற்றும் மனித நேய நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சுகளுக்கு இரையாயின.
3). பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு மனித நேய உதவிகள் கிடைக் காமல் இலங்கை அரசு தடுத் துள்ளது.
4). போரில் உயிர் பிழைத்த மக்கள், குறிப்பாக, உள்நாட்டில் இடம் பெயர வைக்கப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப் புலிப் போராளிகள் என்ற சந்தேகத் திற்குரியவர்கள் ஆகியோர் தொடர்ந்து மனித உரிமை மீறலுக்கு ஆளாகி யுள்ளனர்.
5). போர்க்களத்திற்கு அப்பால் இருந்து - போரை எதிர்த்த ஊடகத் துறையினர் மற்றும் பிற திறனாய்வாளர்கள் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப் பட்டனர்.
என்ற முடிவுக்கு ஐ,நா விசார ணைக் குழுவினர் வந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலி களின் மீதும் இவ்விசாரணைக் குழுவினர் சில குற்றச்சாட்டு களை வைத்தனர். சிறுவர்களைப் போராளிகளாக சேர்த்தது, மக்கள் வாழிடங்களுக் கருகில் போர்க்கருவிகளைச் சேமித்து வைத்தது, மனிதக் கேடயமாக மக்களைப் பயன் படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவை.

ஆயினும் இலங்கை அரசு தான் பெருமளவில் உலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்திருக்கிறது என இக்குழு அறிவித்தது.

பன்னாட்டுச் சட்டங்கள் வரையறுத்துள்ள போர்க் குற்றங்கள் (WAR CRIMES), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against Humanity) ஆகியவற்றில் சிறீலங்கா அரசும் அதன் படையணிகளும் ஈடுபட் டுள்ளன என அறிவித்தது.

மேற்கண்ட தங்களது குற்றச்சாட்டுக்கு விரிவான ஆதாரங்களை இக்குழு முன்வைக்கிறது.

“சிறீலங்கா அரசு தாங்கள் (விடுதலை புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கும்) மனித நேய மீட்பு நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டதாகவும், அப்பாவி மக்கள் ஒருவர் கூட கொல்லப்படக்கூடாது என்பதை ஒரு கொள்கை யாகவே திட்டமிட்டு கடை பிடித்ததாகவும் கூறிக்கொண் டது. ஆனால் உண்மை நிலை நேர்மாறாக இருந்ததை விசார ணைக் குழு அறிந்தது. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட அடிப்படை மனித உரிமைகள் விரிந்த அளவில் பெருமெடுப்பில் மீறப்பட்டுள்ளதற்கு நம்பகமான ஆதாரங்கள் உள்ளன. இவற்றின் மீது ஐ.நா தலைமைச் செய லாளர் அனைத்து நாட்டுச் சட்டங்களின் படி சுதந்திரமான விசாரணை அமைப்பை நிறுவி விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையில் இக்குழு கண்டறிந்துள்ள குற்றச் சாட்டுகள் மெய்ப்பிக்கபடுமானால் அவை போர் குற்றங்கள் (WAR CRIMES) மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against Humanity) என்ற வகையினத்தின் கீழ் வரத்தக்க கொடுங்குற்றங்களாகும்” என்று ஐ.நா விசாரணை குழு தெரிவிக்கிறது.
ஐ.நா குழுவின் இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

தாங்கள் இவ்வாறான முடிவிற்கு வந்ததற்கு உரிய காரணங்கள் இருப்பதை விசாரணைக் குழுவினர் தெளிவு படுத்தினர்.

“போரின் கடைசிக் கட்டங்களில் இலங்கை இராணுவம் உலகச்சட்டங்கள் அனைத்தை யும் அப்பட்டமாக மீறியுள்ள தற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. 2008 -க்கும் 2009 மே 19-க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை இராணுவம் வன்னிப் பெருநிலத்தில் பெருமளவிலும் விரிந்த பரப்பிலும் கொடும் ஆயுதங்கள் கொண்டு தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத் தியது. பெரும் எண்ணிக்கை யிலான பொது மக்களின் சாவுக்கு இது காரணமாக அமைந்தது. இலங்கைப் படையினர் நடத்திய இத்தாக்கு தலானது வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இன வதை (PERSECUTION) நடவடிக்கையாகும்”. என ஐ.நா குழுவினர் வரையறுத் திருப்பது அரசியல் வகையில் கவனிக்கதக்க ஒன்றாகும். இது பற்றி பின்னர் பார்ப்போம்.

”போரில்லா பகுதி ((No Fire Zone) என்று மூன்று அடுத்தடுத்த பகுதிகளை வரையறுத்து அப்பகுதிக்குள் மக்கள் வந்து விட்டால் அவர்கள் மீது இராணுவத் தாக்குதல் நிகழாது என்று இலங்கை அரசு அறிவித்தது. அதை நம்பி தமிழ் மக்கள் அப்பகுதிக்குள் குவிந் தனர். ஆயினும் அப்பகுதியிலும் இடைவிடாத எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. கனரக ஆயுதங்களை பயன் படுத்துவதில்லை என்று அரசு அறிவித்த பிறகும் இவ்வாறான தாக்குதல்கள் நடந்தன. ஐ.நா முகாம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு வழங்கல் தடம், நிவாரணப் பொருள்களை தாங்கி வந்த சர்வதேச செஞ்சிலுவை கப்பல் நிறுத்தப் பட்ட இடம் ஆகியவையும் படையினரின் குண்டு வீச்சுக்கு இரையாயின. அவ்விடங்களில் அமைந்திருப்பவை மனிதநேய செயல்பாட்டு நிறுவனங்கள் என்பதை இலங்கை அரசின் உளவு நிறுவனங்கள் தெரிந்தே வைத்திருந்தன. இவை தாக்கப்பட்டால் போரில் சிக்கிய மக்களுக்கு அடிப்படை பொருள்கள் கிடைக்காமல் அல்லல்படுவார்கள் என்று தெரிந்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இவ்விடங்கள் பற்றி அறிக்கை வெளியிட்டு எச்சரித்த பின்னும் இக்கொடுமை நிகழ்த்தப் பட்டது.

போர் முனையில் இருந்த மருத்துவமனைகள் திட்டமிட்டு குண்டுவீசி தாக்கப் பட்டன. வன்னியில் அனைத்து மருத்துவ மனைகளும் தகர்க்கபட்டன. இவை மருத்துமனைகள் என்பதை அரசு தெளிவாக தெரிந்து வைத்திருந்தது. ஆயினும் மீண்டும் மீண்டும் இம்மருத்து மனைகள் இலங்கை இராணு வத்தின் எறிகணைத் தாக்குத லுக்கு இரையாயின. போர் முனையில் சிக்கிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செல்வதை இராணுவம் திட்டமிட்டு தடுத்தது. 2009 சனவரிக்கும், மே மாதத்திற்கும் இடையில் பல பத்தாயிரம் மக்கள் கொல்லப் பட்டனர். அவர்களில் பலபேர் கடைசி சில நாட்கள் நடந்த அழிப்பில் அடையாளம் தெரியாமல் மரணம் அடைந்தனர்”. என்று வன்னிப் பெருநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பை ஐ.நா குழு படம்பிடித்துக் காட்டுகிறது.

”போரில் உயிர் தப்பியவர்கள் போர்ப் பகுதியிலிருந்து வெளியே வந்த பின்னும் பட்டினி யிலும் துயரத்திலும் சிக்க வைக்கப்பட்டார்கள். உள்நாட்டு ஏதிலிகள் (அகதிகள்) வேலிக்குள் மூடிய முகாம்களில் முடக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளைக் கண்டறிவதற்காக என்று செய்யப்பட்ட சோதனைகள் வெளிப்படையாகவோ வெளிநாட்டு கண்காணிப்பின் கீழோ நடத்தப்படவில்லை. விடுதலைப் புலிகள் என்று கருதப்பட்டவர் கள் தனித்து வைக்கப்பட்டு விசாரணை ஏதுமின்றி கொல்லப்பட்டார்கள். அவர்களுள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட் பட்டிருக்கக் கூடும். போர்ப் பகுதிக்கு வெளியே இருந்துக் கொண்டு போருக்கு எதிராக கருத்துத் தெரிவித்த ஊடகத் துறையினர் மற்றும் பிறர் கடுமையாக அச்சுறுத்தபட்டார்கள். வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களும், ஒட்டு குழுக்களால் அச்சுறுத்தப் பட்டவர்களும் பலர்” என ஐ.நா விசாரணைக்குழு அறிக்கை சிங்களக் காடையர்களின் கொடுங்கோன்மையைப் பட்டியலிடுகிறது.

நடுநிலையற்ற இலங்கை நீதித் துறை
படை நடவடிக்கை ஒரு நாட்டில் நடைபெறும் போது அதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சட்டங்கள் மீறப் பட்டால் அதற்கு ஆட்சியாளர்களும் படைத்தளபதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டக் கடமையை எடுத்துக் காட்டும் ஐ.நா குழு இது குறித்து இலங்கையில் நடை பெற்ற அரசுசார் முயற்சிகளைத் திறனாய்வு செய்கிறது.
போர் முடிந்த பிறகு உலகின் பல பகுதிகளில் எழுந்த கண்டனங்களை எதிர்கொள்வ தற்காக இராசபட்சே அரசு ‘பெற்ற படிப்பினைகள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்’ (Lessons Learnt and Reconciliation Commission ) அமைத்தது. 2002-ல் நார்வே மேற்பார்வையில் நடந்த போர் நிறுத்தம் தொடங்கி 2009 மே முடிய நடைபெற்றவை குறித்து மீளாய்வு செய்து தவறுகளைத் திருத்திக்கொண்டு இன இணக்கத்தை ஏற்படுத்துவது இவ்வாணையத்தின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஆணையம் “சர்வதேச சட்டத்தரத்தில் விசாரணை நடத்தவில்லை. இவ்வாணையத்தின் விசாரணை சுதந்திரமாகவோ நடுநிலையோடோ நடத்தப் படவில்லை” என ஐ.நா விசாரணைக் குழு தனது அறிக்கையில் திறனாய்வு செய்கிறது.
நடைபெற்ற சட்ட மீறல்கள் மீது விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு இலங்கை நீதிமன்றத்தாலும் முடியாது என்பதையும் ஐ.நா குழு கூறுகிறது.

“இலங்கை நீதித்துறையின் கடந்த கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அதன் கட்டமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்தபோது, தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் நீதித்துறையின் வழியாக இப்போரில் பாதிக்கப்பட்டமக்கள் நியாயம் பெறமுடியாது. அந்நாட்டு நீதித் துறையின் மீது விசாரணைக் குழுவிற்கு கொஞ்சமும் நம் பிக்கை இல்லை”. என இராசபட்சேயின் முகத்தில அறைந்தாற் போல் ஐ.நா குழு தனது அறிக்கையில் தெளிவுபடுத்துகிறது. கடந்த 30 ஆண்டு களில் அந்நாட்டில் நிறுவப் பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்களும், சிறீலங்கா மனித உரிமை ஆணையமும் சட்டப் பொறுப்போடு நடந்துக் கொண்ட வரலாறு இல்லை என்று ஐ.நா குழு எடுத்துக் கூறுகிறது.

இனவெறி பதற்றம் நீடிக்கிறது
இதற்கு மேலும் இலங்கையில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஐ.நா விசாரணை ஆணையம் கீழ்வருமாறு குறிப் பிட்டு கூறுவது உலக சமுதாயம் கவனிக்கத்தக்கது.
"அ). தமிழ்ப் பயங்கரவாதத்தை வீழ்த்திவிட்டதாக ஒரு வகை வெற்றி வெறி அரசால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. தமிழர்களின் அரசி யல் விழைவுகள், அவர்களது தன்னாட்சி மற்றும் அவர்களது அடையாளம் ஆகியவை மறுக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இராணுவ நடவடிக்கையில் நிகழ்ந்த மனித அழிவு கூட வெற்றியின் அடையாளமாகக் காட்டப்படுகிறது.

ஆ.) இன அடிப்படையில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளியல் ஒதுக்கல் தான் அங்கு நடைபெற்ற இனமோதலுக்கு மையக் காரணமாக அமைந்தது. அது தொடர்கிறது.

இ.) அவசர காலச் சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டம் ஆகிய போர்க்காலச் சட்டங்கள் போர் முடிந்த பிறகும் தொடர்வது மட்டுமின்றி, போர் நடந்த பகுதிகளில் படைக்குவிப்பு தொடர்வதும் இராணுவ ஒட்டுக்குழுக்கள் வன்முறை யிலும் அச்சுறுத்தலிலும் ஈடு பட்டு மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதும் தொடர்கிறது.

ஈ.) ஊடகத்துறையின் மீது கடும் கட்டுப்பாடுகள் தொடர்வது அங்கு அமைதி யின்மையை நீடித்துகொண்டிருக்கின்றது".



கடமை தவறிய ஐ.நா.மன்றம்
பான் - கீ-மூன் நியமித்த இந்த விசாரணை ஆணையம் ஐ.நா தனது கடமையிலிருந்து தவறியதையும் சுட்டிக்காட்டுகிறது. “போரின் கடைசி காலக் கட்டங்களில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஐ.நா வின் அரசியல் உறுப்புகளும் நிறு வனங்களும் ஈடுபடத் தவறின.” என்று விமர்சிக்கிறது.

அதுமட்டுமின்றி ஐ.நா மனித உரிமை மன்றம் இப் பிரச்சினை குறித்து செய்த தவற்றையும் விசாரணைக்குழு சுட்டிகாட்டுகிறது.

“2009 மே 27-ஆம் நாள் ஐ.நா மனித உரிமை மன்றம் தனது சிறப்புக்கூட்டத்தில் சிறீலங்கா நிலைமை குறித்து இயற்றிய தீர்மானத்தை (கி/பிஸிசி/8-11/லி.மி-ஸிமீஸ்.2) எங்களது இந்த அறிக்கையின் வெளிச்சத்தில் மீளாய்வு செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்துகிறது.

ஐ.நா. வரலாற்றில் மே 2009ல் இலங்கை குறித்து இயற்றப் பட்ட தீர்மானம் இரத்தவாடை வீசும் தீர்மானம் ஆகும். அத்தீர்மானம் கீழ்வருமாறு இராசபட்சே அரசை பாராட்டியது.

“ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கையின் இறையாண்மை, எல்லை, சுதந்திரம் ஆகியவற்றோடு நாட்டு மக்களைப் பாதுகாத்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதன் தனி உரிமையை மதிக்கிறோம் என்பதை உறுதிபடுத்துகிறோம். அதே வேளையில் பொதுமக்கள் மீது பல தாக்குதல்களை நடத்தி அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக் கைகளையும் கண்டிக்கி றோம்”. இலங்கை முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை இந்தியா, சீனா, ரசியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. (ஐ.நா மனித உரிமை மன்றத் தீர்மானம் குறித்த விரிவான திறனாய்விற்குக் காண்க: ’கியூபாவும் ஆல்பாவும் ஈழத் தமிழர்களை கைவிட்டதேன்’-ரான் ரெட்னூர் - தமிழில் அமரந்த்தா - தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்-, திசம்பர், 2009)

இத்தீர்மானத்தை மறுபரி சீலனை செய்ய ஐ.நா விசார ணைக் குழு வற்புறுத்துவது முக்கியமான முன்னேற்றமாகும்.

போர் நடந்து கொண்டிருந்த போதும், போர் முடிந்த நிலையிலும் ஈழப் பேரவலம் குறித்துக் கடமை தவறிய ஐ.நாவின் போக்கில் இந்த விசாரணைக் குழு அறிக்கை ஒரு முக்கியத் திருப்பத்தைக் குறிக்கிறது. உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள், குறிப்பாக ஈழத்தமிழர்களின் அமைப்புகள் மேற்கொண்ட இடையறாத அரசியல் முயற்சிகளின் குறிப் பிடத்தக்க வெற்றி இது.

இரண்டு குறைபாடுகள்

ஆயினும் ஐ.நா விசாரனைக் குழுவின் இவ்வறிக்கையில் முக்கிய இரண்டு குறைபாடுகள் உள்ளன.
1.). இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை (GENOCIDE) என்ற உண்மையை நேரடியாகத் தெளிவுப்படுத் தாதது.
2.) இந்த இனப்படுகொலைப் போரில் நேரடியாக இந்தியாவும் மறைமுகமாக சீனாவும் வேறு சில நாடுகளும் பங்கேற்றதைத் தெளிவாகக் குறிப்பிடாமை.

இனப்படுகொலை

ஐ.நா விசாரணைக் குழு அறிக்கையானது இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதற்கு நெருக்கமாக பலசெய்திகளைக் கூறுகிறது. ‘வன்னி மக்கள் மீது நடந்த இன வதை நடவடிக்கை (PERSECUTION)” என்றும், நடந்தது ‘மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Crime Against Humanity)’ என்றும் வரையறுக் கிறது. ஆயினும் நடந்தது இனப் படுகொலைதான் (GENOCIDE) என்பதைச்சுட்டிக்காட்டத் தயங்குகிறது.

உலக வரலாற்றில், சனநாயக காலத்தில் கூட இன அழிப்பு கள் நடந்திருந்தாலும் நாஜி இட்லர் குழுவிற்கெதிரான நியூரம்பர்க் விசாரணை தான் இனப்படுகொலை குறித்து விவாதித்த முதல் நிகழ்வாகும். இட்லரின் நாஜிப்படை யூதர்களை அவர்களது இன அடையாளம் காரணமாகவே கொன்றது. இது குறித்த நியூரம்பர்க் விசாரணையின் போதுதான் புகழ்பெற்ற வழக்கறிஞர் ரபேல் லெம்கின் (Raphel Lemkin) இனப்படுகொலை (GENOCIDE) என்ற விளக்கத்தை முன்வைத்தார்.

இட்லரின் 24 தளபதிகள் மீது அன்றைக்கு விசாரணை நடத்திய நியூரம்பர்க் மன்றம் நடைபெற்ற குற்றம் “மனித குலத்திற்கு எதிரான குற்றம் தான்” (Crime Against Humanity) என்று முடிவு செய்தது. ஏனெனில் அன்று உலகச் சட்டங்களில் ’இனப்படு கொலை’ என்பதற்கான வரை யறை ஏதுமில்லை.

ஆயினும் நியூரம்பர்க் தீர்ப்புக்குப் பிறகு உலகச் சட்ட வல்லுனர்களிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் நடைபெற்ற தொடர் விவாதங்கள் அரசியல் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இவற்றின் விளைவாக ஜெனீவாவில் நடைபெற்ற இனப் படுகொலை குற்றத்தைத் தடுப்பது மற்றும் இக்குற்றத் திற்கான தண்டணை குறித்த ஐ.நா. மாநாடு 1948 டிசம்பர் 9 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் ஒன்றை இயற்றியது. (தீர்மானம் 260(iii) ) இது 1951இல் உலகச் சட்டமாக ஏற்கப்பட்டது. ஆயினும் வல்லரசுகளின் அடாவடி காரணமாக 1994-ல் தான் செயலுக்கு வந்தது.

இச்சட்டத்தின் விதி 2 'இனப்படுகொலை' எனபதற்கு கீழ்வரும் விளக்கத்தை அளிக் கிறது.
“ஒரு தேசிய இனத்தையோ, பண்பாட்டு இனத்தையோ, மரபு இனத்தையோ அல்லது மதக் குழுவையோ முழுமை யாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அழிக்கும் நோக் குடன் செய்யப்படும் கீழ்வரும் அனைத்துச் செயல் பாடுகளும் இனப்படுகொலை. (GENOCIDE) ஆகும்.

மேற்சொன்ன

அ.) ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது.

ஆ.) ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ கொடும் தீங்கை உருவாக்குவது.

இ.) ஒரு குழுவின் முழுமையையோ அதன் ஒரு பகுதியையோ உடல் ரீதியாக அழிப்பதற்கு உரிய வாழ் நிலைமையைத் திட்டமிட்டு உருவாக்குவது.

ஈ.) ஒரு குழுவினரிடையே குழந்தைப் பிறப்பைத் தடுக்க திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்வது.

உ.) ஒரு குழுவின் குழந்தை களை வலுக்கட்டாயமாக வேறொரு குழுவினருடன் இணைத்துவிடுவது”
மேற்கண்ட வரையறையின்படி பார்த்தால் ஈழத்தமிழர்கள் மேற்குறிப்பிட்ட அனைத்துக் கூறுகளின் படியும் சிங்கள இனத்தால் இனப்படு கொலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர் என்பது புரியும்.

கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழினம் சிங்கள அரசின் கைகளில் சிக்கி மொழி, தாயகம், பண்பாடு, வேலைவாய்ப்பு, பொருளியல்வாய்ப்பு ஆகிய அனைத்து முனைகளிலும் இன ஒதுக்கலுக்கு ஆளாகி அதன் உச்சமாக கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்த இனப் படுகொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் எதிர் வினையாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் தோன்றி கடந்த 30 ஆண்டுகளாக இனத்தற்காப்புப் போரில் ஈடுபட்டனர்.

நடந்திருப்பது ஐ.நா சட்டப்படி இனப்படுகொலைதான் என நாம் வலியுறுத்துவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்த உண்மை நிலையை உலகம் ஏற்க வேண்டும் என்பது. இரண்டு, இனப்படுகொலை தான் என்று ஏற்றுக் கொண்டால் ஒரு அரசமைப்பில் இரு தேசிய இனங்களும் சேர்ந்து வாழ வழியில்லை என்ற உண்மை அரசியல் நிலவரத்தை உலகம் ஏற்பது எளிதாகும் என்பது. இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனத்தை அதன் விருப்பத்திற்கு எதிராக ஒடுக்கும் தேசிய இனத்தோடு சேர்ந்து வாழ வலியுறுத்த முடியாது என்பது உலகின் சட்ட நிலைமை ஆகும்.

நடந்திருப்பது இனப்படு கொலைதான் என முடிவு செய்யாததால் தான் ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் இலங்கைத் தீவை இரண்டு இனங்களுக்குமான பொதுத் தாயகம்(Common Homelant) என்றும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை 'தீவிர தேசியவாதம்' என்றும் பிழை யாக வரையறுக்கிறது.

மேலும் போர்க்குற்றத்தை விட இனப்படுகொலை குற்றத்திற்கு கூடுதல் தண்டனையும் உண்டு. சிங்கள இனவெறி கும்பலுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

அண்மைக்காலத்தில் யூகோஸ்லேவியாவின் செர்பிய இனவெறி ஆட்சிக்கும்பல் ஸ்லோபோடான் மெலோ சோவிச் (Slobodan Milosevic), ராடோவான் கராடிச் (Radovan Karadzic), ராட்கோ மெலாடிச் (Ratko Mladic) ஆகியோர் மீது நடந்த இரு வழக்குகளில் இப்பிரச்சினை குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

போஸ்னிய மக்களையும் செர்பியாவில் உள்ள சிரபெரனிக்கா (Srebrenica) பகுதியில் இசுலாமியர்களையும் பெரும் எண்ணிக்கையில் கொன்றதற்காக இவ்வழக்குகள் நடைபெற்றன. இதற்கென்று 1998 இறுதியில் முன்னாள் யூகோஸ் லேவியாவிற்கான அனைத்து நாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal For the Former Yugoslavia ICTY) நிறுவப்பட்டது. இவ்வழக்குகள் மீது 2001-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டிலும் மெலோசோவிச் குழுவினர் இனப்படுகொலை குற்றத்தில் (Crime Of Genocide) ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

2002இ-ல் பன்னாட்டுக் குற்ற வியல் நீதிமன்றம் நிறுவப் பட்டது. யூகோஸ்லேவியா தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீது 2004-ஆம் ஆண்டு வழங்கப் பட்ட இறுதித் தீர்ப்பு சிர பெரனிக்காவில் நடந்தது இனப் படுகொலைக் குற்றம் என்றும், போஸ்னியாவில் நடந்தது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் வரையறுத்தது.

யூகோஸ்லேவியா தீர்ப்பா யத்தில் நீதிபதியாகப் பணி யாற்றிய பாட்ரீஷியா எம் வால்டு (Partica M. Waild) இத்தீர்ப்புகளின் மீது ஆய்வுரை எழுதினார். (Genocide and Crimes aganist Humanity- patricia M. Wald- Washington University Global Studies Law Reviw Vol-6) “இனப்படுகொலை” என்பதும் “மனித குலத்திற்கு எதிரான குற்றம்” என்பதும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் எனக்கூறும் வால்டு இவற்றிற்கிடையே இருக்கிற மயிரிழை வேறு பாட்டையும் விளக்குகிறார்.

“பொதுமக்கள் மீது திட்ட மிட்ட முறையிலோ விரிவான அளவிலோ தெரிந்தே நடத்தப் படும் கொலைவெறித் தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான குற்றம் எனப்படும். இவ்வாறான படுகொலைத் தாக்குதல் ஒரு தேசிய இன மக்கள் மீதோ, ஒரு மரபினக் குழுவினர் மீதோ , ஒரு பண்பாட்டு இனத்தினர் மீதோ, ஒரு மதத்தினர் மீதோ வேண்டு மென்றே திட்டமிட்டு நடத்தப் பட்டால், அதுவும் அவர்களை முழுமையாகவோ அல்லது அவர்களில் ஒரு பகுதியின ரையோ அழித்தொழிக்கும் வகையில் நடத்தப்பட்டால் அது இனப்படுகொலை குற்றமாகும் (Crime Of Genocide). இங்கு இன அழித்தொழிப்பு என்பதற்கு யூகோஸ்லேவியா தீர்ப்பு குறிப்பான நிபந்தனையை வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உடலியல் ரீதியாகவோ கட்டமைப்பு வகையிலோ அழிக்கப்பட்டால் அதுவே இனப்படுகொலை வகைப்பட்ட அழித்தொழிப்பு ஆகும்” (மேற்படி நூல் பக்கம் 623--624).
ஈழத்தமிழர் மீதான சிங்கள அரசின் தாக்குதல் இச்சட்ட விளக்கத்தின் படி இனப்படு கொலைக் குற்றமே ஆகும்.

ஈழத்தமிழர்கள் உடலியல் வகையிலும் அழிக்கப்பட்டனர், அவர்களது வாழ்வாதார கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன. விடுதலைப்புலிகள் உருவாவதற்கு முன்னாலயே இவ் வழிப்புகள் தொடங்கி விட்டன. அம்மக்கள் பிறப்பால் தமிழர்கள் என்பதாலேயே அழித்தொழிக்கப்பட்டனர். இதற் கான அரசியல், பண்பியல், வரலாற்றியல், பொருளியல் நடவடிக்கைகள் சிங்கள அரசால் திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்டன. அவற்றிற் கான சட்டங்களும் நிறுவனங் களும் ஏற்படுத்தப்பட்டன.

இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனக் குழுவினர் இந்த அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க தேசிய இனத்தோடு ஓர் அரசமைப்புக் குள் சேர்ந்து வாழவே வழி யில்லை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.




இந்தியா இனப்படுகொலைக் குற்றவாளியே!

இந்த இனப்படுகொலைக் குற்றத்தில் சிங்கள் அரசு மட்டுமின்றி இந்தியாவும் ஈடுபட்டுள்ளது. 2008--2009 இல் நடைபெற்ற உச்சகட்ட இன அழிப்புப் போரில் சிங்களத் தோடு இந்தியாவும் இணைந்து ஈடுபட்டது உலகறிந்த உண்மை. இந்திய செயற்கை கோள்கள் சிங்களப் படையினருக்கு உளவு சொல்லியும், இந்திய முப்படைத் தளபதிகள் வெவ்வேறு நேரங்களில் நேரில் சென்று ஆலோசனை வழங்கி வழிகாட்டியும், கனரக ஆயுதங்கள் வழங்கியும் விடுதலைப்புலிகளின் கப்பல்களை இந்தியக் கடலில் வழி மறித்து தாக்கி அழித்தும் இந்தியா இப்போரில் நேரடியாக ஈடுபட்டது. பல்லாயிரக் கணக்கான ரூபாய் சிங்கள இராணுவத்திற்கு வழங்கியும் பலாலி படை விமான தளத்தை சீரமைத்தும், 1000 கோடி ரூபாய் வட்டி யில்லா கடனாக இலங்கை அரசுக்கு அளித்தும் இந்த இனப்படுகொலைப் போரில் இந்தியா மறைமுகமாக ஈடு பட்டது.

பேரவலங்கள் உச்சநிலை அடைந்த போது போரின் கடைசி வாரங்களில் மேற்குலக நாடுகள் சிங்கள அரசை நிர்ப்பந்தித்து போர் நிறுத்தத்திற்கு முயன்றபோது இந்திய அரசுதான் அவசரமாகக் குறுக்கிட்டு போர் நிறுத்தம் வராமல் பார்த்துக் கொண்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்திலிருந்து இத்தகவலை எடுத்து விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வராமல் தடுத்து, இலங்கை அரசைப் பாராட்டித் தீர்மானம் கொண்டு வந்ததில் இந்தியாவின் பங்கு முகாமையானது. இந்தியப் பேராளர் கோபிநாத் அச்சன் குளங்கரே ‘பயங்கரவா தத்தை முறியடித்த இலங்கை அரசை உலக நாடுகள் பாராட்ட வேண்டுமே தவிர இச்சூழலில் அவ்வரசின் நடவடிக்கைகளைத் திறனாய்வு செய்து பலவீனப் படுத்தக் கூடாது’ என்றார். சிங்கள அரசைப் பாராட்டி ஐ.நா மனித உரிமை மன்றத்தில் மே 2009-இல் இயற்றப்பட்டத் தீர்மானத்திற்கு முக்கிய உந்து சக்தியாக இந்தியா இருந்தது.

ஆனையிறவு முகாமை விடுதலைப்புலிகள் கைப்பற்றி தமிழீழத் தாயகத்தின் மிகப் பெரும் பகுதியை வெற்றி கொண்ட பின், புலிகளின் கை மேலோங்கிய நிலையில், வேறு வழியின்றி சிங்கள அரசு போர் நிறுத்தத்திற்கு முன் வந்தது. 2002 பிப்ரவரியில் நார்வே முயற்சியில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆயினும், இந்த அமைதி யைக் குலைத்து மீண்டும் ஆக்கிரமிப்புப் போரை நடத்துவ தற்கான வாய்ப்பை எதிர்பார்த் திருந்தது. இதே நிலையில் தான் இந்தியாவும் இருந்தது. 2002இல் இந்திரா என்ற பெயர் கொண்ட ஆற்றல் வாய்ந்த ராடார் கருவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது.

அதே 2002இல் தாக்குதல் விமானங்கள் தாங்கிய சுகன்யா என்ற ரோந்துக் கப்பலை இந்தியக் கடலில் நிரந்தரமாக நிறுத்தி இலங்கைக்கு போர்க்கள உதவி செய்தது. இலங்கையைச் சுற்றிக் கடற்பகுதியில் மிதவைக் கிட்டங்கிகளில் விடுதலைப் புலிகள் சேமித்து வைத்திருந்த ஆயுதங்களைத் தேடித் தேடி இந்தியக் கடற்படைக் கப்பல்கள் அழித்தன. ஐ.நா. விசாரணைக் குழுவினர் கூட இந்த உண்மை யை தங்களது அறிக்கையில் குறிப்பிடுகின்றனர் (அறிக்கை பக்கம்: 15).

இந்திய - இலங்கை எல்லைப் பகுதியிலிருந்து 1700 கிலோ மீட்டருக்கு அப்பால் கிட்டத் தட்ட இந்தோனேசியாவிற்கு அருகில் புலிகள் வைத்திருந்த மிதவை ஆயுதக் கிடங்குகள் கூட இந்தியக் கப்பற்படை யினரால் அழிக்கப்பட்டது. எந்த சர்வதேச சட்டத்தையும் இந்தியா மதிக்கவில்லை. இந்திய சுற்றுக் காவல் கடற்படை கடற்புலிகள் செயல் பாட்டை 2006 வாக்கில் பெருமளவு முடக்கிப் போட்டதைக் குறிப்பிட்டு இலங்கை படையதிகாரிகள் பலமுறை பாராட்டிப்பேசினர்.

ஊடுருவித் தாக்க வல்ல ஆயுதந்தாங்கிய விமி-17 வகை ஹெலிகாப்டர்கள் 5-ஐ இந்தியா இலங்கைக்கு 2006இல் வழங்கியது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இந்தியக் கொடி மற்றும் சின்னங்கள் இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று இலங்கை அரசால் அழிக்கப் பட்டன.

2006இல் இலங்கைத் தேர்தலில் இராசபட்சே வெற்றிபெற்ற பிறகு இந்திய -இலங்கை கூட்டுப் போர் முயற்சி தெளிவான அமைப்பு வடிவம் பெற்றது. இருநாட்டு உயர்மட்ட அரசுத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து இன அழிப்புப் போரை உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தெளிவாகத் திட்டமிட்டனர். இதற்கு முன்பு இந்தியாவின் வலுவான முயற்சியால் உலக நாடுகள் பலவற்றிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என சித்தரிக்கப்பட்டு அடுத்தடுத்து தடை செய்யப்பட்டது. அந்நாடுகளில் பரவி வாழும் ஈழத்தமிழர்கள் நிதி திரட்டி, விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதை தடுப்ப தற்குப் பலவகைகளில் இத்தடை உத்தரவு பயன்பட்டது.

2007இல் தொடங்கி இலங்கைத் தரப்பில் பசில் ராசபட்சே, கோத்தபய ராச பட்சே, லலித் வீரத்துங்க ஆகியோரும் இந்தியத் தரப்பில் எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், விஜய சிங் ஆகியோரும் கொண்ட உயர்மட்டக் குழு போரை வழிநடத்தும் குழுவாக செயல்பட்டது. போர்க்களத்தின் ஒவ்வொரு அசைவும் இக்குழு வின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு இவர்களது ஆணைப்படியே அத்தனை அழிப்புகளும் நடத்தப்பட்டன. அன்றைக்குக் கொழும்பிலிருந்த ஐ.நா. பேச்சாளர் கார்டன் வீஸ்(Gorden Weiss) பி.பி.சி.க்கு அண்மையில் அளித்த செவ்வியில் ”போர் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவிற்கு தெரிந்தே நடந்தன” என கூறியிருப்பது இதற்கு மேலும் ஒரு சான்றாகும்.

இந்த அறுவர் குழு 2007--2009 மே மாதத்திற்கு இடையே 5 முறை கூடி ஒவ்வொரு கட்டத்திற்கும் இந்த இனப் படுகொலைப் போரை நகர்த்தியது.

2008இல் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்கு என்று அழைத்துச் செல்லப் பட்ட இந்தியப் படையினர் பலர் இலங்கையிலேயே தங்க வைக்கப்பட்டனர். அம் மாநாட்டை ஒட்டி இருநாட்டு உயர்மட்டத் தலைவர்கள் சந்திக்கும் போது போரை எப்படியாவது 2009 கோடைக் குள் முழுஅளவில் நடத்தி முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தனர். அது தான் நடந்தது.

எந்தப் போரிலும் நடந்திராத பெரும் இனஅழிப்பு 2009 சனவரிக்குப் பிறகு ஈழத்தில் நடந்தேறியது. போரின் கடைசி நாட்களில் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. விசாரணைக் குழுவும் சுட்டிக் காட்டுகிறது.

இந்தப் போரில் இலங்கை அரசுக்கு இந்தியா பலவகையில் உதவி செய்ததை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை குடியரசுத்தலைவர் இராசபட்சே மற்றும் இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் ஆகியோர் பலமுறை உறுதி செய்துள்ளனர்.

நடந்துள்ள இனப்படு கொலைப் போரில் இந்திய அரசும் குற்றவாளியே.

ஐ.நா சட்ட விதி 3 தண்டனைக்குரிய இனப்படு கொலைக் குற்றம் என்பதில் “3மீ இனப்படுகொலையில் துணை செய்வது” என்பதையும் சேர்த்தே கூறுகிறது. இச்சட்டத்தின் படி இந்திய அரசு தண்டனைக்குரிய இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவு.

ஐ.நா விசாரணைக் குழு வரையறுப்பது போல் இலங்கையில் நடந்தது ‘மனித குலத்திற்கு எதிரான குற்றம்’ என்றாலும் அதிலும் இந்திய அரசின் பங்களிப்பு முக்கியமானது. இராசபட்சே, பொன்சேகா கும்பலைப்போலவே சோனியா - மன்மோகன் சிங் அணியினரும் ஐ.நா. அமைக்கும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு நிறுத்தப் படவேண்டியவர்களே.

முதலில், ஐ.நா. தான் செய்த தவற்றை திருத்திக் கொள்ளும் முயற்சியாக 2009 மே 27இல் மனித உரிமை மன்றம் இயற்றியத் தீர்மானத்தை நீக்க வேண்டும். நடந்துள்ள இனப் படுகொலை குற்றத்திற்கு, மனித உரிமை மீறலுக்கும் இராச பட்சே அரசையும் மன்மோகன் சிங் அரசையும் குற்றம்சாட்டி கண்டனத் தீர்மானம் இயற்ற வேண்டும்.

போஸ்னியா, செரபெரனிக்கா, ருவாண்டா, சூடான் ஆகியவற்றில் நடந்தது போல் அனைத்து நாட்டு நீதி மன்றத்தில் இராசபட்சே கும்பல், சோனியா - மன்மோகன் சிங் கும்பல் ஆகியோரை குற்றக் கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். உலகச் சட்டங்களின் படி உரிய தண்டனை வழங்க வேண்டும்.

தெற்கு சூடானில் நடந்தது போல் தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் பழம்பெரும் இனமான சூடானிய இனம் தன் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்திக்கொள்ள, தனது தாயக உரிமையை உறுதி செய்துக் கொள்ள நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தியது. 1947-இல் பிரிட்டனின் பிடியிலிருந்து விடுபட்ட போது வடக்கு சூடானின் இனவெறி ஆதிக்கத்தின் கீழ் தெற்கு சூடான் விடப்பட்டது. கூட்டாட்சி முயற்சி தோற்ற நிலையில் தேச விடுதலையை முன் வைத்து தெற்கு சூடானியர்கள் போராட்டம் நடத்தினர்.

அமைதிப் போராட்டங்கள் குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதால் 1983 –க்கு பிறகு தெற்கு சூடான் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடி வெடுத்தது.மருத்துவர் ஜான் கரங் டி மபாயர் (Dr.John Garang De Maboir) தலைமையில் உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் மற்றும் அதன் படை (SPLM/A -Sudan People’s Liberation Movement) விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது.

இடைவிடாத போராட்டத்தில் ஏறத்தாழ 10 இலட்சம் சூடானியர்கள் கொல்லப் பட்டனர்.இப்போதைய வடக்கு சூடான் குடியரசு தலைவர் அல்-பஷிர் ஆட்சியில் மட்டும் மூன்றே ஆண்டுகளில் 2இலட்சம் சூடானியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். பத்து இலட்சம் பேர் உள்நாட்டு அகதிகளாகக் கூடாரத்தில் முடக்கி வைக்கப்பட்டனர். அதைவிட பன்மடங்கு மக்கள் அண்டை நாடான எரித்திரியாவிலும் ஆப்பிரிக்க கண்டத்தின் பல்வேறு நாடுகளிலும் ஏதிலிகளாக அல்லல்பட்டனர்.

தொடர்ந்த போராட்டத்தின் விளைவாகவும் உலக அரசியல் அரங்கில் தெற்கு சூடான் விடுதலைக்கான நியாயத்தை அரசியல் வழியில் வலியுறுத்தியதன் விளைவாகவும் 2005-ல் வடக்கு சூடான் அரசுக்கும் தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையில் ஐ.நா மேற்பார்வையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அமைதி ஒப்பந்தக் காலத்தில் விமான விபத்து என்ற பெயரால் போராட்டத் தலைவர் ஜான் கரங் டி மபாயர் நயவஞ்சகமாக்க் கொல்லப்பட்டார்.

ஆயினும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் சல்வாக்கிர் மாயார்தித் என்ற தளபதியை அடுத்தத் தலைவராக தேர்ந்தெடுத்தது தொடர்ந்து நடைபோட்டது.

வடக்கு சூடான் குடியரசு தலைவர் அல்-பஷிர் அனைத்து நாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.அவர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட போதிலும் அதற்கு போதுமான சான்றுகள் முன்வைக்கப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் அவரை மனித குலத்திற்கு எதிராக குற்றம் இழைத்தவர் என்று தீர்ப்பளித்து சிறை தண்டனை அறிவித்தது.

நடந்தது மனித குலத்திற்கு எதிராக குற்றம் (Crimes Against Humanity) என்று முடிவெடுத்த போதிலும் பெரும் தொகையான தெற்கு சூடானிய மக்கள் கொல்லப்பட்டு இருப்பதால் அங்கு இனப்பகை தொடர வாய்ப்புண்டு என்று கருதிய ஐ.நா மன்றம் வடக்கு சூடானோடு தெற்கு சூடானியர்கள் ஒரே அரசமைப்பில் இணைந்து வாழ விரும்புகிறார்களா என்று அறிய முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் கடந்த 2001 சனவரியில் தெற்கு சூடானில் ஐ.நா மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடந்தது.அதில் 99% தெற்கு சூடானியர்கள் தனி நாடாக பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்தனர். தெற்கு சூடானியர்களின் இந்த விருப்பத்தை அங்கீகரித்து, தெற்கு சூடான் விடுதலையை ஏற்குமாறு அல்-பஷிர் ஆட்சியை உலக நாடுகள் வலியுறுத்தின அவரும் ஏற்றுக்கொண்டார். வருகிற சூலை 2011-ல் தெற்கு சூடான் ஐக்கிய நாடுகள் அவையில் புதிய நாடாக சேர இருக்கிறது.

இதே போல தமிழீழத்திலும் இயல்பு நிலையை ஏற்படுத்தி அங்குள்ள ஈழத்தமிழர்களிடத்திலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடத்திலும் ஐ.நா மன்றம் கருத்து வாக்கெடுப்பு நட்த்த வேண்டும்.அந்த வாக்கெடுப்பின் முடிவை செயல்படுத்த வேண்டும்.

அப்போதுதான் மாண்டுபோன இலட்சக் கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்திற்கு நியாயம் வழங்கியதாகும்.


ஓரிரு முக்கியக் குறைபாடுகள் இருந்த போதிலும் ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை ஈழத்தமிழருக்கான ஞாயத்தை நிலைநாட்டும் தமிழர்களின் போராட்டத்தில் கிடைத்த முக்கியமான ஆயுதமாகும். இலங்கைக் குடியரசுத் தலைவர் இராசபட்சே, உலக சமூகத்தின் முன் பொது மன்னிப்புக் கேட்டு, ஐ.நா. விசாரணைக்கு ஒத்து ழைக்க வேண்டும் என ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கீ மூன் விடுத்திருக்கும் வேண்டு கோளை இலங்கை அரசு ஏற்கச் செய்ய உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும்.
ஐ.நா. மன்றமே பன்னாட்டு நீதிமன்றத்தில் இராசபட்சே கும்பலை கூண்டில் ஏற்று!
இந்திய ஆட்சியாளர்களைக் கூண்டில் ஏற்று!

அமைதிச் சூழலை ஏற்படுத்தி ஈழத்தமிழர்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்து!
என்ற முழக்கம் உலகெங்கும் ஒலிக்கட்டும்!
தமிழீழம் வெல்க!
தமிழ்த் தேசம் மலர்க!



பின்னிணைப்பு:

ஐ.நா குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள்

பரிந்துரை 1: புலன் விசாரணைகள்

அ. ஐ.நா. குழு நம்பகமானவை என்று கண்டறிந்துள்ள குற்றச் சாற்றுகளின் பின்னணியில், இலங்கை அரசு அதனுடைய பன்னாட்டு கடமைப் பொறுப்புகளுக்கு ஏற்ப, உள்நாட்டில் பயனுள்ள பொறுப்புடைமை (Accountability) நடைமுறையைத் தொடங்கும் நோக்கில், ஆயுத மோதலில் ஈடுபட்ட இருதரப்புகளும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தை மீறியது தொடர்பான இந்தக் குற்றச் சாற்றுகள் மற்றும் பிற குற்றச் சாற்றுகள் தொடர்பான உண்மையான புலன் விசாரணைகளை உடனே தொடங்கவேண்டும்.

ஆ. ஐ.நா. பொதுச் செயலாளர் உடனடியாக சுதந்திரமான பன்னாட்டு அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும்பின்வருவன அதன் செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.

(1) குற்றம் சாற்றப்படுகிற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உண்மையான புலன் விசாரணைகளை மேற்கொள்வது உள்பட, இலங்கை அரசு உள்நாட்டுப் பொறுப்புடைமை நடைமுறையை எந்த அளவுக்கு பயனுள்ளதாக மேற்கொண்டு வருகிறது என்பதை கண்காணித்து மதிப்பிட வேண்டும். அது கண்டறிந்தவை குறித்து குறிப்பிட்ட கால இடை வெளியில் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும்.

(2) உண்மையான, பயனுள்ள உள்நாட்டு புலன் விசாரணைகளை உறுதி செய்வதைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாற்றப்படுகிற மனித உரிமை மீறல்கள் குறித்து தனியாக சுதந்திரமாக புலன் விசாரணைகளை நடத்த வேண்டும்.

(3) ஐ.நா. அமைப்பும், பிற அமைப்புகளும், ஐ.நா. குழுவும் திரட்டிய தகவல்கள் உள்பட இறுதிக் கட்ட போர் தொடர்பான பொறுப்புடைமை சம்பந்தமாக அதற்கு வழங்கப்பட்ட தகவல்களை எதிர் காலப் பயன் பாட்டுக்காக சேகரித்து, பாதுகாத்து வைக்க வேண்டும்.


பரிந்துரை 2: பொறுப்புடைமையை மேம்படுத்து வதற்குத் தேவையான பிற உடனடி நடவடிக்கைகள்.

மனித உரிமை மீறல்களுக்கு உள்ளான, தொடர்ந்து உள்ளாக்கப்படுகிறவர்களின் உடனடி நிலைமைக்குத் தீர்வு காணும் நோக்கிலும், பொறுப் புடைமை தொடர்பான இலங்கை அரசின் உறுதிப் பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் பின் வரும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

அ. வன்னிப் பகுதியில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் அனைவரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் இலங்கை அரசு பின்வரும் குறுகிய கால நடவடிக் கைகளை செயல்படுத்த வேண்டும்:

(1) அரசு, அதன் அமைப்புகள், அனைத்து துணைப் போர்ப்படைகள் மற்றும் அரசுக்காக செயல் படும் ரகசியக் குழுக்கள் அல்லது அரசினால் சகித்துக் கொள்ளப்படும் ரகசியக் குழுக்கள் ஆகியவற்றின் அனைத்து வன்முறைச் செயல்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

(2) இறந்தவர்களின் எஞ்சிய உடல் பகுதிகளை அவர்களது குடும்பத்தினர் மீட்டு எடுத்துச் செல்ல வழி வகுக்கவேண்டும். இறந்தவர்களுக்கான சடங்கு களைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

(3) குடும்பத்தினர் கேட்கும் போது இறந்தவர்கள், காணாமல் போனவர்களின் இறப்புச் சான்றிதழ்களை விரைவாகவும், மதிப்புடனும் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும். இவர்கள் தொடர்பாக மேலும் புலன் விசாரணைகளை நடத்தக் கோருதல் மற்றும் பிற கோரிக்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.

(4) உயிர் பிழைத்தவர்கள் அனைவருக்கும் அவர்களது கலாச்சார சிறப்பியல்புகளுக்கும், மரபுவழி நடைமுறைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் உளவியல்-சமூக ஆதரவை அளிக்க வேண்டும்.

(5) இடம் பெயர்ந்த அனைவரையும் விடுவிக்க வேண்டும். அவர்களது விருப்பப்படி அவர்கள் தங் களது முன்னாள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு அல்லது மறு குடியமர்த்தப்படுவதற்கு உதவி செய்ய வேண்டும்.

(6) உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் இயலபு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு இடைக்கால இடர் நீக்க உதவிகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும்.

ஆ. கட்டாயப்படுத்தி காணாமல் அடிக்கப்பட்ட வர்கள் எனக் கூறப்படுவோர் குறித்து இலங்கை அரசு புலன் விசாரணை நடத்தி, அவர்களது கதி என்ன, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக - கட்டாயப்படுத்தி காணா மல் அடிக்கப்பட்டவர்கள் தொடர்பான பணிக் குழுவை இலங்கை அரசு இலங்கைக்கு வரவழைக்க வேண்டும்.

இ. நாட்டின் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசு நெருக்கடி நிலை விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இலங்கையின் பன்னாட்டு கடமைப் பொறுப்புகளுக்கு முரணாக இருக்கிற, பயங்கரவாதச் செயல் தடுப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் திருத்தி அமைக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பாகவும் மற்றவர்கள் தொடர்பாகவும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

(1) இப்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைவரது பெயர்களையும், அவர்கள் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வெளியிட வேண்டும். அவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கான சட்ட அடிப்படையை அறிவிக்க வேண்டும்.

(2) சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் குறிப்பிட்ட கால இடை வெளியில் குடும்பத்தினரையும் வழக்குரைஞரையும் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

(3) சிறை வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சிறை வைக்கப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் வழக்காட அனுமதிக்க வேண்டும்.

(4) கடுமையான குற்றங்கள் இழைத்திருக் கிறார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பவர் களுக்கு எதிராக குற்றச்சாற்று பதிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இனியும் தடையில்லாமல், அவர்கள் சமுதாயத்து டன் ஒருங்கிணைவதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஈ. அரசு வன்முறைக்கும் நடமாடும் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிற அல்லது அந்தச் சூழலை ஏற்படுத்துகிற மற்ற நடைமுறைகளுக்கும் இலங்கை அரசு முடிவு கட்ட வேண்டும்.


பரிந்துரை 3: நீண்ட கால பொறுப்புடைமை நடவடிக்கைகள்

வெற்றி வாதமும், உரிமை மறுப்பு வாதமும் நிலவும் இப்போதைய சூழல் கடந்த காலம் குறித்த நேர்மையான ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை. அரசியல் செயல்பாடுகளுக்கான கதவுகள் முழுமையாகத் திறக்கப்படும் நிலையில் போரின் போது நடந்த செயல்களுக்கு முழுப் பொறுப்புடைமையை நோக்கி முன்னேறுவதற்கு உதவும் வகையில் நீண்ட கால அடிப்படையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அ. இருதரப்புகளிலும் தேசிய இனத் தீவிரவாதம் உள்ளிட்ட மோதல்களுக்கான வேர்க் காரணங்கள், போர் நடத்தப்பட்ட முறை, எந்தெந்த வகையில் உரிமை மீறல்கள் நிகழ்ந்தன; சம்பந்தப்பட்ட நிறுவனப் பொறுப்புகள் முதலியவற்றை விமர்சன நோக்கில் ஆய்வு செய்வதற்கு, படிப்பினைகளை கற்றுக் கொள்வதற்கும் இணக்கத்துக்குமான ஆணையத்தின் (எல்எல்.ஆர்சி.) பணிகளை கருத்தில் எடுத்துக் கொள்ளும் அதே வேளையில், அதற்கு அப்பாற்பட்டு வலுவான சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் ஒரு தனியான நடைமுறையை இலங்கை தொடங்க வேண்டும்.

ஆ. போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவில் அப்பாவி மக்கள் பலியானதில் தனக்குள்ள பங்கையும் பொறுப்பையும் முறையாக வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட வேண்டும்.

இ. போரின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப் பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகின்ற பகுதியினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் இழப்பீடுகளுக்கான திட்டத்தை இலங்கை அரசு தொடங்க வேண்டும்.


பரிந்துரை 4: ஐ.நா செய்ய வேண்டியவை :

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பிறகும் வன்னிப் பகுதியில் அப்பாவி மக்களின் நிலைமை தொடர்பாக ஐ.நா. எடுத்த நடவடிக்கைகளை பரிசீலித்து பின்வரும் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன.

அ. இந்த அறிக்கையின் பின்னணியில் இலங்கை தொடர்பாக கடந்த 2009 மே மாத சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை (ஏ/எச்ஆர்சி/எஸ்.11/1ரெவ்.2) மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஆ. இலங்கையில் போரின் போதும் அதற்குப் பிறகும், மனித நேயத்துக்கும் பாதுகாப்புக்குமான ஐ.நா. கட்டளைகளை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.நா. அமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் விரிவான மறு ஆய்வு நடத்த வேண்டும்.

நன்றி: தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்( கி.வெங்கட்ராமன்)