Wednesday, December 5, 2007
ஏன் ?
Tuesday, October 16, 2007
விடுதலைப் பொரில் தமிழ்களம் - கவிபாஸ்கர்
விடுதலைப் பொரில் தமிழ்களம்
வடக்கே
வந்தேமாதரம்
ஜெய்ஹிந்த்
இரட்டை சொற்றொடர்கள்
விடுதலை வேண்டி
உருண்டு புரண்டது
தெற்கே சிவகங்கை
சிங்கங்கள்
கர்ஜித்த கீதங்கள்
ஒருமித்த குரலாய்
பிறந்து எழுந்தது
இரட்டைக் கிளவியை
பிரித்தால் பொருள்
வராது
இலக்கண வாய்பாட்டில்..
இரட்டை சகோதரர்கள்
மருதிருவரை மறந்தால்
மறுத்தால் வீரம்
விளையாது
தமிழக வரலாற்றில்..
சிவகங்கை சீமை
இது
ஓட்டிப் பிறந்த
இரட்டை வீரர்கள்
முட்டி முளைத்த
இடம்
வேல் கம்பு
வீச்சருவாளிடம்
வெள்ளைக்கார பீரங்கி
மண்டியிட்ட மண்
ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்தாலும்
சாவு நிச்சயம்
போராட வா
என்று காற்று கிழிய
காதுகளின் ஓசை
ஒலித்த இடம்
தேச விடுதலை
துலைநிமிர
ஐநூறு தலைகள்
கயிறில் தலைகுனிந்து
தொங்கிய இடம்
வீரம் விளைந்த
நிலம்
அடிமை விலங்கு
அறுந்த இடம்
அந்நியரை விரட்ட
அணிதிரண்ட
விடுதலைப் போரின்
முதற்களம்
எங்கள் தமிழ்நிலம்
ஆம்.
முண்ணுக்காக
போராடிய அந்த
மருது சகோதரர்களின்
குரலோசை இன்று
செவிப்பறையில்
வந்து மோதுகிறது
வீரத்தால் சிந்திய
ரத்தம் இன்று
தேசத்;தின் அழுக்கை
துடைக்கிறது
தூக்குக் கயிறுக்கு
மட்டுமே
தலைகுனிந்த
மருது சகோதரர்களை
நாங்கள் தலைநிமிர்ந்து
வணங்குகிறோம்.
அவர்கள் வீரமரபு
வழியில்
நாங்கள் வாளேந்தி
செல்கிறோம்
Friday, September 7, 2007
இது ஒரு கவிதை பத்தாயம்
Monday, August 27, 2007
'கவிபாஸ்கரி''ன் தொட்டில் கனவு!
'கவிபாஸ்கரி''ன் தொட்டில் கனவு!
லதா ராமகிருஷ்ணன்
![]() | |
24 வது இளைஞர் கவிபாஸ்கர். கவிஞர்; ஓவியர். திரைப்படப் பாடலாசிரியர். தமிழர் கண்ணோட்டம், கணையாழி, தினகரன், மாலைச்சுடர், முதலிய பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. புதிய நிலா, தொட்டாற்சிணுங்கி கிய இரண்டு கவிதைத் தொகுப்புகளோடு சமீபத்தில் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'தொட்டில் கனவி'ன் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. அய்யா நிலையம் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் கவிபாஸ்கரின் கோட்டோவியங்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பகுதி நேர ஓவியராகவும் இயங்கி வரும் கவிபாஸ்கர் தஞ்சாவூரில் ஒரு சிறிய கிராமத்தில், எளிய குடும்பத்தில் பி¢றந்தவர். திரைப்படப் பாடலாசிரியராக வேண்டுமென்ற ர்வம் காரணமாக 2002ல் சென்னை வந்தவர் காற்றுள்ள வரை வாலிபன், குடியரசு, திரு, திருடிய இதயத்தை முதலிய படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியாகும் திரைப்படப் பாடல் காட்சிகளில் பாடல்களை எழுதியவர்களின் பெயர்களை வெளியிடாமல் இருப்பது தன் போன்ற எத்தனையோ பேருக்கு மனவருத்தம் அளிப்பதாகவும், இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் தங்கத்தோடு கூறுகிறார் கவிபாஸ்கர்.
தமிழ் மீதுள்ள பற்று காரணமாக கவிதை எழுத்த் தொடங்கியதாகவும், திரைப்படத் துறையில் நல்ல பாடல்களை எழுதி முத்திரை பதிக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புவதாகவும் தெரிவிக்கும் இவர் தனக்குள் ஒளிந்திருந்த எழுத்தாற்றலை வெளிக்கொணர்ந்த தனது தமிழாசிரியர், மற்றும் திரைப்படத்துறையில் தன்னை ஊக்குவித்து வரும் இயக்குனர் ராதாபாரதி, மணிவண்ணன் ,மற்றும் சிலரையும், தமிழர் கண்ணோட்டம் இதழைச் சேர்ந்த திரு.பத்ம்நாபன், திரு.மணியரசன், திரு.நெய்வேலி பாலு முதலியோரையும் நன்றியோடு நினைவுகூர்கிறார். தன் முயற்சிகளுக்கெல்லாம் ஊக்கமளித்து வரும் தாயும், தந்தையும் தனது மிகப் பெரிய பலம் என்கிறார்.
சமீபத்தில் நடந்தேறிய இவரது தொட்டில் கனவு கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே கவிபாஸ்கரின் உழைப்பு, விடாமுயற்சி, தோழமையுணர்வு முதலிய பண்புநலன்களைப் பாராட்டிப் பேசினர். 29.9.06 அன்று நடந்தேறிய விழாவில் திரு.பெ.மணியரசன்(சிரியர், தமிழர் கண்ணோட்டம்), இயக்குனர் வே.சேகர்(திருவள்ளுவர் கலைக்கூடம்), கவிஞர் பூவைசாரதி(உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை), ஓவியர் புகழேந்தி, இயக்குனர் ராதாபாரதி, எழுத்தாளர் அமரந்த்தா, லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ஜான் தன்ராஜ்(பொதிகைத் தொலைக்காட்சி), கவிஞர் பூர்ணசந்திரன் முதலிய பலர் கலந்து கொண்டனர். தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான திரு.மணிவண்ணன் கவிபாஸ்கரின் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.