தென்ன ஓலையில்
கடிகாரம் செய்து
பூவரசம் பூவில்
ஊது குழல் இசைத்து
வேர்க்கடலையால்
தண்டட்டி அணிந்து
சீவாங்குச்சியில்
மெட்டிகள் மாட்டி
பனை ஓலையால்
ஒட்டியாணம் கட்டி
ஆவாரம் பூவில்
மாலைகள் அணிந்து
விளையாட்டுத்தனமாய்
நீயும் நானும்
சின்னஞ் சிறு வயதில்
திருமணம் செய்து கொண்டோம்
மரப்பாச்சி பொம்மையை
குழந்தையாய்
வளர்த்து....
வளர்ந்தோம்..
பிரிந்தோம்..
பல ஆண்டு கடந்து
வந்திருந்தாய்
எங்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு...
நீ...கணவனை இழந்த
விதவையாய்..
நான்..மனைவியை இழந்த

1 கருத்துகள்:
சோதனை...
Post a Comment